தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
#India
#Tamil Nadu
#Tamil People
#HeavyRain
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருகின்ற வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



