மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்!

#SriLanka #Death #Police #Murder #Investigation
PriyaRam
2 years ago
மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்!

பண்டாரகம, சமரநாயக்க வீதியிலுள்ள தங்குமிடமொன்றில் இடம்பெற்ற விருந்தொன்றின் பின்னர் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய நீர் வழங்கல் சபையின் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும், அகலவத்தை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ராவேது ஹசித் ஆரியவன்ச என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

images/content-image/2023/10/1698132833.jpg

உயிரிழந்த இளைஞனும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்றுமொரு நபரும் அவர்கள் தங்குவதற்கு வழங்கப்பட்ட இரண்டு மாடி வீட்டில் தங்கியிருந்ததாகவும், இருவரும் மாலையில் விருந்து வைத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4