கரையை கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
10 months ago
கரையை கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் உருவாகிய இந்த புயலுக்கு 'தேஜ்' என பெயரிடப்பட்டது. இந்த நிலையில், புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, அதன் பின்னர் அதி தீவிர புயலாக மாறி ஏமன், ஓமன் நாடுகளை நோக்கி நகர்ந்து வந்தது.

இந்நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் ஏமன் கரையை வந்தடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலானது கரையை கடக்கும் போது 125-135 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவித்துள்ளது.