இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்க்கும் தூதரகம்!

#SriLanka #Israel #War
Mayoorikka
2 years ago
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்க்கும் தூதரகம்!

இஸ்ரேலில் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தை இன்றும் (24) நாளையும் (25) இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் முன்னெடுக்கவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

 இஸ்ரேல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Ail Sisso மற்றும் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை தூதரகத்திற்கு விஜயம் செய்து விசா இல்லாத இலங்கையர்களுக்கும் ஏனைய துறைகளில் உள்ள இலங்கையர்களுக்கும் விசா வழங்குவதற்கும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் விசாக்களை புதுப்பிப்பதற்கும் வருகை தந்துள்ளனர். 

 இது தொடர்பில் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஐல் சிஸ்ஸோ இந்த கோரிக்கையை ஏற்று இஸ்ரேலில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை கேட்டறிந்ததாகவும், அத்தோடு விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகள் உள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். 

விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களை விடுவிப்பதற்கு பணிப்பாளர் நாயகம் சம்மதம் தெரிவித்ததாக தூதுவர் தெரிவித்தார்.

 இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்று (24) அதிகளவான மக்கள் இதில் தொடர்பு கொண்டதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4