கொழும்பில் ஆசிரியர் அதிபர் சங்கத்தின் போராட்டத்தில் பதற்றம் - கண்ணீர்ப் புகைத் தாக்குதல்!

#SriLanka #Police #Protest #Attack #Teacher
PriyaRam
2 years ago
கொழும்பில் ஆசிரியர் அதிபர் சங்கத்தின் போராட்டத்தில் பதற்றம் - கண்ணீர்ப் புகைத் தாக்குதல்!

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

images/content-image/2023/10/1698141107.jpg

ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலச் சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோதே பொலிஸாரினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொரளை கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4