பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பின்தங்கியுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பின்தங்கியுள்ளது!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பின்தங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.  

இந்த அர்ப்பணிப்பு இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க ஒரு காரணம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  திட்டமிட்டபடி பெரும்பான்மையான சீர்திருத்த முன்மொழிவுகளை பூர்த்தி செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4