இலங்கையில் இதுவரையில் 67000 டெங்கு தொற்றாளர்கள் பதிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் இதுவரையில் 67000 டெங்கு தொற்றாளர்கள் பதிவு!

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன இன்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இன்று வரை மாத்திரம் இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.  

இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால்  டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், கடந்த காலத்தில் நாளாந்தம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 தொடக்கம் 80 வரை இருந்த போதிலும், நாளாந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  

அதிகளவு டெங்கு தொற்று பதிவாகும் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டம் அபாய மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4