அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும், அதில் சந்தேகம் இல்லை : ரங்கே பண்டார!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும், அதில் சந்தேகம் இல்லை : ரங்கே பண்டார!

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பினால் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் திட்டமிட்டு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. 

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டின் போது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் 2025 இல் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.இதனுடன் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இப்போது வீணாகிவிட்டன.  

முன்னாள் ஜனாதிபதிகள் போன்று ரணில் விக்கிரமசிங்கவும் குழந்தைகளை தூக்கி முத்தமிட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனவே, ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4