அந்நியரின் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு காணும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
அந்நியரின் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு காணும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். கார்த்திகை 1: ஆரோக்கியம் சீராகும். பண வரவில் இருந்த தடை விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தொழிலில் உண்டான தடைகள் விலகும். உறவினர் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும். ரோகிணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். மிருகசீரிடம் 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த செய்தி வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். திருவாதிரை: அந்நிய இனத்தினர் உதவியுடன் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புனர்பூசம் 1,2,3: கல்வியாளர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பூசம்: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம்: பயணத்தில் தடைகள் தோன்றும். எதிர்ப்பு வலுக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். பூரம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். உத்திரம் 1: கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். சித்திரை 1,2: மறைமுகமாக தொல்லைகள் வழங்கி வந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.

துலாம்:

சித்திரை 3,4: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும். சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: தாய் வழி உறவினர்களால் சில சங்கடங்கள் தோன்றும். பூர்வீக சொத்துகள் பற்றிய பேச்சு எழும். அனுஷம்: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகுவார்கள் என்றாலும் உங்கள் விருப்பத்தில் ஒன்று நிறைவேறும். கேட்டை: தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீங்கள் எண்ணியதை அடைவீர்கள்.

தனுசு

மூலம்: சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவில் தடையுண்டாகும். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். திருவோணம்: பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வரும் வரவை வைத்து நெருக்கடியை சரி செய்வீர்கள். சதயம்: விரய சனியும், குடும்ப ராகுவும், ஆயுள் ஸ்தான கேதுவும் உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார்கள். பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும்.

மீனம்

பூரட்டாதி 4: ஜென்ம ராகுவால் உண்டாகும் நெருக்கடிகள் லாப சனியால் விலகும். உத்திரட்டாதி: யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். ரேவதி: சிலர் உங்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தவறான வழிக்கு அழைக்கலாம். கவனம் தேவை.