வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை வழங்க நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #Mullaitivu #land
Mayoorikka
2 years ago
வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை வழங்க நடவடிக்கை!

வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை அம்மக்களுக்கே வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 இவ் விடையம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,,, வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் கிராம மக்களுக்கு 1994ம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விவசாய காணிகள் யுத்த காலத்தில் ஏற்பட்ட இடப் பெயர்வின் காரணமாக மக்கள் பயன்படுத்த முடியாதவாறு இருந்து வந்தது. மீண்டும் மீள் குடியேறிய மக்களுக்கு அக் காணிகளுக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வந்தது.

images/content-image/2023/10/1698213038.jpg

 இதனால் மக்களின் காணிகள் பல ஏக்கர் மாற்று இனத்தவரினால் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் நீண்ட கால முயற்சியின் பலனாக நேற்றைய தினம் செவ்வாய் (24) எனது தலமையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக கள விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர்.

images/content-image/2023/10/1698213082.jpg

பொது அமைப்புக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டதுடன் இப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபுரம் மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டது .என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4