பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கைக்கு வரவுள்ள சீனாவின் உளவுக் கப்பல்! உறுதிப்படுத்திய அமைச்சர்

#India #SriLanka #China #Ship
Mayoorikka
2 years ago
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கைக்கு வரவுள்ள சீனாவின் உளவுக் கப்பல்! உறுதிப்படுத்திய அமைச்சர்

புவிசார் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் சியான் ஆறு ஆராய்ச்சிக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதி செய்துள்ளார்.

 இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ள கப்பல் இன்று கொழும்புமுறைமுகத்தை வந்தடையும். 

 முன்னதாக இந்த கப்பல் நவம்பர் மாதம் இலங்கை வருவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 எனினும் சீனா ஒக்டோபரில் இந்த கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை கோரியிருந்தது.

images/content-image/2023/10/1698215756.jpg

 கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் சீனாவின் ஆராய்ச்சி கப்பலின் இலங்கை விஜயம் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டடிருந்த இந்தியா இந்த கப்பலின் இலங்கை விஜயம் குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இந்துசமுத்திரத்தின் கடலில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் திறன் சீன கப்பலிற்கு உள்ளதை சுட்டிக்காட்டி இந்தியா பல தடவை கரிசனை வெளியிட்டுள்ளது.

 இந்த ஆராய்ச்சிகளுக்கு சீனாவின் நீர்மூழ்கிகள் இந்து சமுத்திரத்தில் செயற்படுவதற்கு மிகவும் அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4