மாத்தறை மாவட்டத்தின் சிலப் பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் விநியோகத் தடை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறை மாவட்டத்தின் சிலப் பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் விநியோகத் தடை!

தெவிநுவர நகரம், பட்டியஹேன, தலல்ல, கந்தரை, ஜயபோதிய, கப்புகம, கந்தஹேன, அத்கஹவத்த மற்றும் வேலேகொட ஆகிய பகுதிகளுக்கு நாளைய தினம் (26.10) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியவசிய திருத்த வேலைகள் காரணமாக மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 9.30 வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4