லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலையை குறைத்துள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லங்கா சதொச நிறுவனம் சில பொருட்களின் விலையை குறைத்துள்ளது!

லங்கா சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

இதன்படி சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  

images/content-image/1698237193.jpg

அதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ உளுந்தின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்பு அரிசி கிலோ ஒன்று 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 

புதிய விலைத்திருத்தத்திற்கு அமைய சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 222 ரூபாவாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ ஒன்றின் விலை 169 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4