கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு : அதிக விலைக்கு விற்பனை செய்யப்படலாம் எனவும் தகவல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு : அதிக விலைக்கு விற்பனை செய்யப்படலாம் எனவும் தகவல்!

நாடு முழுவதும் உள்ள சந்தைகளில்  கீரி சம்பா அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில பகுதிகளில், கீரி சம்பா அரிசி கிலோ ஒன்று 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

 கட்டுப்பாட்டு விலையின்படி கேரி சம்பா கிலோ கீரி சம்பா அரிசியை 260 ரூபாவிற்கு விற்பனை சயெ்ய வேண்டும். ஆனால் ஆலை உரிமையாளர்களால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

கடந்த காலங்களில் கீரி சம்பா அரிசி விவசாயிகளிடம் இருந்து நூற்றி பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பண்டிகைக் காலங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ கெரி சம்பா 300 ரூபாவுக்கு மேல் விலை போகக் கூடும் எனவும் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4