யாழில் முன்னெடுக்கவுள்ள புதிய திட்டங்கள் - தலைவராக நியமிக்கப்பட்டார் சி.வி.கே.சிவஞானம்!

#SriLanka #Douglas Devananda #Jaffna
PriyaRam
2 years ago
யாழில் முன்னெடுக்கவுள்ள புதிய திட்டங்கள் - தலைவராக நியமிக்கப்பட்டார் சி.வி.கே.சிவஞானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி வழங்குவதற்கு முன்னர் அவை தொடர்பாக ஆராயவே சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவின் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் காணிகளை ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

images/content-image/2023/10/1698300750.jpg

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ர்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கல்வி, சுகாதாரம், கால்நடை, விவசாயம், கமநல சேவைகள், போக்குவரத்து, காணி, நீர்வழங்கல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4