நாட்டில் உரத்திற்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார் விவசாய அமைச்சர்!

#SriLanka #Mahinda Amaraweera
PriyaRam
2 years ago
நாட்டில் உரத்திற்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார் விவசாய அமைச்சர்!

பெரும் போக நெற் செய்கைக்குத் தேவையான போதியளவு உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, தேவையன பிரதேசங்களுக்கு களஞ்சியசாலைகளில் இருந்து உரம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவிற்கான நிதியும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698302779.jpg

தனியாரிடமும் போதியளவான உரம் காணப்படும் நிலையில், விவசாய நடவடிக்கைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படாமையின் காரணமாக உர விற்பனை குறைவாகக் காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏதேனும் பிரச்சினை அல்லது அதிகாரிகள் மட்டத்தில் தவறுகள் காணப்படும் பட்சத்தில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4