பாடசாலை பேருந்து சேவைகளுக்கு கடும் எச்சரிக்கை!

#SriLanka #School #Police #school van
Mayoorikka
2 years ago
பாடசாலை பேருந்து சேவைகளுக்கு கடும் எச்சரிக்கை!

 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள் மற்றும் வான்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.மனோஜ் ரணகல நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 பயணிகள் போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பல பஸ்கள் மற்றும் வேன்கள் பாடாசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை போக்குவரத்து சேவையாக இயங்கும் பெரும்பாலான பேருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து நீக்கப்பட்ட பேருந்துகள் என கண்டறியப்பட்டுள்ளதாக ASP ரணகல தெரிவித்தார். 

 பாடசாலை சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வான்களும் அவ்வாறே அமைந்துள்ளதாக தெரிவித்த ASP ரணகல, பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளதால் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

 மோட்டார் இன்ஸ்பெக்டர்கள் உதவியுடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து, இது தொடர்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, என்றார். இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று வலியுறுத்திய ASP ரணகல, பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4