பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தை!

#SriLanka #Protest #Tamil People #Tamilnews
Mayoorikka
2 years ago
பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தை!

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல, லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் தொடர்ந்தும் நடாத்தப்படுகின்ற அகிம்சை வழி போராட்டம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. 

 அவ்வகையில் இன்றைய தினம் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல, லகிலேண்ட், கம்பாஹா, கேகீல்ஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் லாபம் கொடுப்பனவு தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் சபையின் ஊடாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு மேற்குறிப்பிட்ட தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றும் வேலை வழங்காமல் பெருந்தொட்ட நிறுவனத்தினால் வேலை நிறுத்தப்பட்டிருந்த 21 நாட்கள் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேதனம் ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை தொழில் ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

 இது தொடர்பில் தொழில் ஆணையாளர் அதிகாரிகள் உரிய தோட்டங்களுக்கு விஜயம் செய்து உண்மை தன்மையை ஆராய்ந்து உடனடியாக கொடுப்பினை வழங்குவதற்கு சிபாரிசு செய்வதாக தொழில் ஆணையாளர் உறுதி அளித்தார்

 மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் கட்டாயமாக ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் வர்த்தமானியில் கிலோகிராம் தொடர்பில் எதுவிட அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க ரீதியில் நமக்கும் கிடைக்கப்பெற்ற பாரியதொரு வெற்றியாக நான் இதனை காண்கின்றேன் என கருத்துரைத்தார்...

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4