பிரான்ஸில் பேருந்தொன்றுடன் மோதிய கொரிய தம்பதியினரில் மனைவி உயிரிழப்பு

#France #Accident #Bus #Lanka4 #SouthKorea #மனைவி #விபத்து #couple #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸில் பேருந்தொன்றுடன் மோதிய கொரிய தம்பதியினரில் மனைவி உயிரிழப்பு

பெண் ஒருவர் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி கொல்லப்பட்டுள்ளார்.  அவரது கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 93 ஆம் நிர்வாகப்பிரில் உள்ள Épinay-sur-Seine நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள L'Ilo வணிக வளாகத்துக்கு அருகே உள்ள Rose Bertin பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

images/content-image/1698319648.jpg

60 வயதுகளையுடைய தம்பதிகள் இருவர் 254 ஆம் இலக்க பேருந்துடன் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளனர். மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தலையில் காயமடைந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

 அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். பேருந்து சாரதி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அவருக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 குறித்த தம்பதிகள் கொரியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என அறிய முடிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!