பிரான்ஸில் கைக்குழந்தை துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகியுள்ளது

#France #Lanka4 #GunShoot #குழந்தைகள் #baby #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸில் கைக்குழந்தை துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகியுள்ளது

மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளது. 

இச்சம்பவம் Seine-et-Marne நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Fontainebleau மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார். 

images/content-image/1698334905.jpg

குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது. சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், அவரது தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதல்கட்டமாக அவரைக் கைது செய்ததுடன், சில மணிநேரம் கழித்து அவரது மனைவியை Milly-la-Forêt பகுதியில் காயமடைந்த நிலையில் கைது செய்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4