சொத்து விவகாரத்தில் வெற்றியடையும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
சொத்து விவகாரத்தில் வெற்றியடையும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். செலவுகள் அதிகரிக்கும். பரணி: செயல்களில் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடுவீர்கள். கார்த்திகை 1: திட்டமிட்டு செலவுகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செயலில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ரோகிணி: எதிர்பாராத வரவுகளை இன்று அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் துணையுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திருவாதிரை: பழைய கடன்கள் வசூலாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். செல்வாக்கு உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். கமிஷன் ஏஜென்சியினர் ஆதாயம் காண்பீர்கள். பூசம்: தந்தை வழி உறவுகளின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் கவனம் அவசியம். ஆயில்யம்: நண்பர்கள் உதவியுடன் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். பூரம்: தேவையற்ற நெருக்கடிகள் தோன்றும் என்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் இன்று சில தடைகள் தோன்றும். எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும். அஸ்தம்: தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். எதிர்பாராத வேலைகள் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: புதிய முயற்சிகள் வெற்றியாகும். யோசிக்காமல் செய்த செயல்களிலும் லாபம் அதிகரிக்கும். அனுஷம்: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள். கேட்டை: திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இடத்தை விற்பதில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பூராடம்: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். இயந்திரப் பணியில் கூடுதல் கவனம் தேவை. உத்திராடம் 1: செயல்கள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சொத்து வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் கவனம் தேவை. திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு எதிர்மறையான பலன்கள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. அவிட்டம் 1,2: எண்ணத்தை வேறு வகையில் சிதற விட வேண்டாம். அதனால் முக்கிய செயல்களில் பாதிப்புண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குறுக்கு வழியில் மனம் செல்லும். உங்களுக்கு எதிராக மறைமுகமாக சிலர் நெருக்கடியை தருவர். சதயம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: விரய சனியும் அஷ்டம கேதுவும் நெருக்கடிகளை அதிகரிப்பார்கள். செயலில் நிதானம் அவசியம்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உத்திரட்டாதி: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். ரேவதி: நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்வார்கள். கூட்டுத் தொழிலில் நெருக்கடி தோன்றும்.