நாடளாவிய ரீதியில் கருப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்பு!

#SriLanka #Protest #Electricity Bill
PriyaRam
2 years ago
நாடளாவிய ரீதியில் கருப்புக்கொடி போராட்டத்திற்கு அழைப்பு!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கருப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாளை போயா தினத்தன்று இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை அரை மணி நேரம் மின் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

images/content-image/2023/10/1698394791.jpg

அந்த அரை மணி நேரம் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை கொழும்பு – குருநாகல் பஹ வீதியில் திவுலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 8.00 மணிக்கு மின் பாவனையாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பேரணி திவுலப்பிட்டியில் இருந்து கொழும்பில் அமைந்திருக்கும் பிளவர் வீதியில் உள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுவரை செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4