பிரான்ஸில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு குற்றப்பணம் அறவீடு

#France #Curfew #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
பிரான்ஸில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு குற்றப்பணம் அறவீடு

ஊரடங்கு அல்லது உள்ளிருப்பு விதிமுறைகளை மீறுவோருக்கான குற்றப்பணத்தை ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 கடந்த கொவிட் 19 வைரஸ் பரவலின் போது மருத்துவ அவசரகாலத்தில் இந்த ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விதிமுறைகளை மீறுவோருக்கு €135 யூரோக்கள் குற்றப்பணமும் (2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில்) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 

images/content-image/1698404120.jpg

இந்நிலையில், இந்த குற்றப்பணத்தை தற்போது ஐந்து மடங்காக அதிகரித்து €750 யூரோக்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தின் போது குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் விதிகளை மீறியிருந்தனர். 

அவர்களுக்கான குற்றப்பணத்தை அவர்களின் பெற்றோர்கள் செலுத்தவேண்டும் என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.