கனடாவின் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

கனடிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கனடாவிற்குள் ஊடுறுவ முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய ஆபத்தான நபர் ஒருவர் நாட்டுக்குள் ஊடுறுவக் கூடும் என கனடிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மாயென் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரி 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர் கனடாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.



