சம்பந்தனின் இடத்தை அபகரிக்க முனையும் சுமந்திரன்!

#SriLanka #M. A. Sumanthiran
PriyaRam
2 years ago
சம்பந்தனின் இடத்தை அபகரிக்க முனையும் சுமந்திரன்!

தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள் என கோருகிறார். 

னால் அவர் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டு மாகாண சபையில் பெரும்பான்மையாக இருந்த போது மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்களை வினைத்திறனோடு பயன்படுத்தினார்களா என அவர் சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற வேண்டும் என தீர்மானிப்பது அவர்களின் கட்சியின் தீர்மானம். 

அதனை அவர்கள் கட்சிக்குள் பேசி தீர்மானிக்க முடியும். அவ்வாறு செய்ய முடியும் என்பது ஒரு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

 அவ்வாறான சூழலில் பொது வெளியில் ஊடகங்கள் ஊடாக சம்பந்தனுக்கு வயது முதிர்ந்து விட்டது. அவர் பதவி விலக வேண்டும் என கூறி கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதன் ஊடாக சம்பந்தனின் பதவியை , சுமந்திரன் இலக்கு வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4