தமிழகத்தில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

#India #Rain #HeavyRain #2023 #Tamilnews
Mani
1 year ago
தமிழகத்தில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-ந் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!