சூர்யா 43 படத்தின் வீடியோ 50 மில்லியன் பார்வைகளை கடந்து
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
1 year ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.
நேற்று சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து, வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒரே நாளில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.