பிரான்ஸில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

#France #Lanka4 #மருந்து #Medicine #Drug shortage #லங்கா4 #France Tamil News #Tamil News
பிரான்ஸில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

பிரான்சில் நான்காயிரம் வகை வரையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பல்வேறு நோய்களுக்குரிய மிக அத்தியாவசியமான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பிரான்சில் மருந்தக விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்த தட்டுப்பாடானது ஒரு மாதத்துக்கோ, இரண்டு மாதங்களுக்கோ நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருந்து வகைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

images/content-image/1698422031.jpg

 இந்த தட்டுப்பாடானது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாகவே பிரான்சிலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக, “அத்தியாவசியமான 50 மருந்து வகைகளை வேறு நாடுகளில் இருந்து தயாரித்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என சென்ற ஜூன் மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!