ரிஷப ராசியினருக்கு வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
ரிஷப ராசியினருக்கு வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். பரணி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1: வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த செய்தி வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் இன்று அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். ரோகிணி: வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப்பணியில் வேலை பளு அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் நிலை சீராகும். திருவாதிரை: புதிய நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.

கடகம்: 

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். பூசம்: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம்: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்

மகம்: நெருக்கடிகள் நீங்கும். நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்திரம் 1: அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் நடப்பதற்கு இன்று வாய்ப்புண்டு. முயற்சிகள் இழுபறியாகும். அஸ்தம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். சித்திரை 1,2: எதிர்பார்த்த செய்தி வரும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். வெளியூர் பயணம் ஆதாயத்தை உண்டாக்கும். சுவாதி: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நற்செய்தி வரும். தாயாரின் உடல்நிலையில் சங்கடங்கள் தோன்றும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் இன்று தெளிவு இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும். 

விருச்சிகம்:

விசாகம் 4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றியடைவீர்கள். அனுஷம்: ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரிகள் இடம் மாறுவர். கேட்டை: நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயமடைவீர்கள். 

தனுசு: 

மூலம்: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து பாராட்டிற்கு ஆளாவீர்கள். பூராடம்: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்திராடம் 1: குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நவீன பொருட்களை வாங்குவீர்கள். 

மகரம்: 

உத்திராடம் 2,3,4: அரசாங்க விஷயத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். திருவோணம்: வழக்கில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். அவிட்டம் 1,2: பிறரது பேச்சைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் இன்று வெற்றி காண்பீர்கள். சதயம்: உங்கள் செயலில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பூரட்டாதி 1,2,3: உங்கள் ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகும். போட்டியாளர்களால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவு செலவில் இருந்த சங்கடம் தீரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். ரேவதி: அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிறைவேறாமல் போகும். பணத் தேவை அதிகரிக்கும்.