சிங்கள மக்கள் வாழாத பகுதியில் எதற்கு விகாரை? தையிட்டியில் பிக்குவிடம் சிங்கள அமைப்பு சரமாரி கேள்வி

#SriLanka #Jaffna #Protest
Mayoorikka
2 years ago
சிங்கள மக்கள் வாழாத பகுதியில் எதற்கு விகாரை? தையிட்டியில் பிக்குவிடம் சிங்கள அமைப்பு சரமாரி கேள்வி

காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 இன்று காலை குறித்த போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக போராட்ட களத்துக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்த காணி உரிமைக்கான மக்கள் அமைப்பை சேர்ந்த சிங்கள சகோதர சகோதரியினர் விகாரைக்குள் சென்று பொறுப்பான பௌத்த பிக்குவையும் சந்தித்தனர். 

images/content-image/2023/10/1698478409.jpg

அதன் போது குறித்த குழுவினரால் சிங்கள மக்கள் வாழாத பகுதியில் எதற்கு விகாரை? தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியில் ஏன் அமைத்தீர்கள் என கேட்கப்பட்ட போது பிக்கு எழுந்து சென்று விட்டதாக குறித்த தென்னிலங்கை குழுவினர் வெளியே வந்து கருத்து தெரிவித்தனர்.

images/content-image/2023/10/1698478440.jpg

 பின் போராட்ட களத்துக்கு சென்று தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர்.

images/content-image/2023/10/1698478464.jpg

 இதேவேளை, அருகிலுள்ள ஆலயமொன்றில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டு ஒலிபெருக்கியை பாவிக்க முனைந்த போது பொலிசார் தடுத்து நிறுத்தினர். 

images/content-image/2023/10/1698476047.jpg

images/content-image/2023/10/1698476104.jpg

பின் விகாரையில் மட்டும் எவ்வாறு ஒலிபெருக்கி பாவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்ட போது அதனையும் சென்று நிறுத்தினர். 

 போயா தினங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/10/1698476082.jpg

images/content-image/2023/10/1698476122.jpg

images/content-image/2023/10/1698476146.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4