கஜகஸ்தான் உருக்கு சுரங்கத்தில் தீவிபத்து : 32 பேர் பலி, பலர் மாயம்!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏறக்குறைய 32 பேர் பலியாகியுள்ளதாகவும், 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும் அதன் உரிமையாளரான ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார்.
மீதேன் வாயு வெடிப்பினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.