எகிப்தில் அடுத்தடுத்து கார்கள் மோதி கொண்டதில் விபத்து; 32 பேர் பலி!
#India
#Death
#Accident
#world_news
#2023
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
#Egypt
Mani
2 years ago
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ மற்றும் மத்திய தரைக்கடல் நகரான அலெக்சாண்டிரியாவை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
இந்த நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பயணிகள் பேருந்து மற்றும் பிற வாகனங்களும் சிக்கி கொண்டன.
பல வாகனங்களில் தீப்பற்றி கொண்டது. இந்த சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். உடனடியாக தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.