ஐரோப்பாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ருமேனியா மற்றும் பல்கேரியாவில் கோழிகளிடையே பறவை காய்ச்சல் பரவுவதாக விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள திகனெஸ்டி கிராமத்தில் உள்ள 120 கோழிகளின் மந்தையில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
இதனால் 28 பறவைகள் உயிரிழந்துள்ளதாக ருமேனிய அதிகாரிகளின் அறிக்கையை மேற்கோள் காட்டி பாரிஸை தளமாகக் கொண்ட விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.