ஹரிஸ் கல்யாணின் நடிக்கும் 'பார்க்கிங்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
ஹரிஸ் கல்யாணின் நடிக்கும் 'பார்க்கிங்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து சாம் சிஎஸ் எழுதி கபில் கபிலன் பாடிய 'செல்லக்கள்ளியே' பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4