மீன ராசியினருக்கு புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
மீன ராசியினருக்கு புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம் - இன்றைய ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: செயல்களில் எதிர்பார்த்த நன்மைகள் இன்று தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். பரணி: திடீர் பயணம் உண்டாகும். கவனக்குறைவால் உங்கள் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவார்கள். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும். கவனம் தேவை. மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் வாங்கி செலவுகள் செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்களது முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர்கள். திருவாதிரை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பூசம்: புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி பலிதமாகும். ஆயில்யம்: நெருக்கடிகள் விலகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் இருந்த சங்கட நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பூரம்: நீங்கள் நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும். உத்திரம் 1: எதிர்பார்த்த பண வரவு உண்டு. தந்தை வழி உறவுகளின் ஆதரவால் ஆதாயம் காண்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: மற்றவரை நம்பி எந்த பொறுப்புகளையும் இன்று ஒப்படைக்க வேண்டாம். அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். சித்திரை 1,2: மறைமுக தொல்லைகள் விலகும் என்றாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். உறவினர்கள் வருகையால் நன்மை அதிகரிக்கும். சுவாதி: நண்பர்கள் ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை வழங்கும். விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் வெளியூர் பயணம் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். கேட்டை: வேகமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பிரச்சினை ஒன்றில் சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: உங்கள் செயல்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். பூராடம்: பெற்றோர் வழியே நன்மையுண்டு. பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: திறமையாக செயல்பட்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருவோணம்: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். அவிட்டம் 1,2: சங்கடங்களை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: வெளியூர் பயணத்தால் ஆதாயம் தோன்றும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். சதயம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். தடைபட்டிருந்த செயல்கள் நண்பர்கள் துணையுடன் நடந்தேறும். பூரட்டாதி 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையில் கவனம் அவசியம்.

மீனம்

பூரட்டாதி 4: வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். பொருளாதார நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: உங்கள் வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் மதிப்புண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். ரேவதி: பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.