மேல் மாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மேல் மாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

எதிர்வரும் 06 மாதங்களில் குற்றச் செயல்களை முற்றாக ஒடுக்குவதற்குத் தேவையான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே இந்நாட்டில் குற்றச்செயல்களை முன்னெடுப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்நாட்டில் பல குற்றவாளிகள் தற்போது பொலிஸாரின் பிடியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4