பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

#SriLanka #Police #Investigation
PriyaRam
2 years ago
பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

இலங்கையில் அடுத்த வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அண்மையில் அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, பேருந்தில் இருந்து ஒரு சிறிய காகித துண்டு வீசப்பட்டது. குறித்த காகிதத் துண்டில் மீண்டும் கொழும்பைத் தாக்க தாங்கள் தயார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும் அதில் உண்மை இல்லை எனத் தற்போது தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தற்போது பாதாள உலகக் குற்றச் செயல்கள் குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது எனத் தெரிவித்த அவர், குறிப்பாக தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்தில் சில இடங்களில் ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

images/content-image/2023/10/1698639901.jpg

நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 

இவை அனைத்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளால் வழிநடத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இப்பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 06 மாதங்களில் முற்றாக நிறுத்துவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பவர்களும் உள்ளனர் என சுட்டிக்காட்டிய அவர், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4