யாழிற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கிக் குழு!

#SriLanka #Jaffna #World Bank #Visit
PriyaRam
2 years ago
யாழிற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கிக் குழு!

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.

இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்துள்ளது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே விஜயம் செய்தனர். 

உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த விஜயத்தின் போது கலந்துகொண்டனர். 

images/content-image/2023/10/1698647170.jpg

நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கிடையிலான வட்டமேசை கலந்துரையாடலில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். 

உலக வங்கியின் உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிப்பதும் இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4