பிரான்ஸ் மதுபானசாலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இருவர் பலி. இருவர் காயம்.

#France #Bar #Lanka4 #GunShoot #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸ் மதுபானசாலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இருவர் பலி. இருவர் காயம்.

நேற்று முன்னாள் சனிக்கிழமை இரவு Gard நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

 Pont-Saint-Esprit நகர்ப்பகுதியில் உள்ள அருந்தகம் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நல்வர் காயமடைந்தனர். 

images/content-image/1698653009.jpg

அவர்களில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

 நள்ளிரவின் பின்னர் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!