லண்டனில் நடந்த போராட்டத்தில் இருபெண்கள் உள்பட பலர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
லண்டனில் கடந்த சனிக்கிழமை நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ரத்த வெள்ளத்தில் இறந்த குழந்தையின் உருவ பொம்மையை அணிவகுத்து கொண்டுச் சென்ற இரண்டு பெண்கள் நேற்று (30.10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இருபெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இன வெறுப்பைத் தூண்டும் செயலில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து, இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.