உணவுப்பொருட்களின் கொள்வனவு பிரெஞ் மக்களிடையே அதிகரிப்பு

#France #people #Food #Lanka4 #உணவு #மக்கள் #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
உணவுப்பொருட்களின் கொள்வனவு பிரெஞ் மக்களிடையே அதிகரிப்பு

விலை அதிகரிப்பு காரணமாக மக்களிடையே குறைந்திருந்த உணவுப்பொருகள் கொள்முதல், செப்டம்பர் மாதத்தில் ஓரளவு சீரடைந்துள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

 சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்த கொள்முதல் 0.2% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதிக விலை, பணவீக்கம் காரணமாக பிரெஞ்சு மக்களிடையே குறைந்திருந்த ‘கொள்முதல் திறன்’ படிப்படையாக சீரடைந்து வருகிறது.

images/content-image/1698752082.jpg

 சென்ற மாதம் 0.2% சதவீதத்தால் அதிகரிக்க, இவ்வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளில் இது 0.8% சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குளிர்பானங்கள், வெதுப்பக உற்பத்தி பொருட்கள், பாஸ்தா உணவுகள் போன்றவைகளின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடைந்திருந்தது.

 சிகரெட் விற்பனை மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்தது. சென்ற 2022 ஆம் ஆண்டு செப்டம்பரோடு ஒப்பிடுகையில், பிரெஞ்சு மக்கள் உணவுப்பொருட்கள் கொள்வனவு செய்வது 3.9% சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.