ஜெயிலர் வசூலை முறியடித்தது லியோ!

#India #Cinema #TamilCinema #Collection #2023 #Vijay #rajini kanth #Movie
Mani
2 years ago
ஜெயிலர் வசூலை முறியடித்தது லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ', செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம், வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிற நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 'லியோ' திரைப்படம் உலகளவில் அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடி வசூலை செய்த நிலையில் 'லியோ' திரைப்படம் அதன் வசூலை முறியடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4