ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் கடகம், சிம்மம் ராசிகளுக்கு 2023 இல் எப்படி?

#Astrology #Lanka4 #ஜோதிடம் #ராசிபலன் #கடகம் #சிம்மம் #லங்கா4 #cancer #leo
ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் கடகம், சிம்மம் ராசிகளுக்கு 2023 இல் எப்படி?

ராகு கேது பெயர்ச்சி பலன்கள். 

 கடகம் :

 சர ராசி கால புருஷ தத்துவத்தின் நான்காவது ராசி குருவிற்கும் கெத்துவிற்கும் பிறந்த நக்ஷத்திரம் கொண்ட ராசி சப்தம அஷ்டம ஸ்தானங்களாக சனி பகவானை கொண்ட ராசி. 

  • தற்போது 3 ம் பாவத்தில் அமரும் கேது பகவான் தொழிலில் புதிய வாடிக்கையாளரை அமைத்து கொடுப்பான். 

  • நீங்கள் எதிர்பார்க்கமலேயே தேவையான, மறைமுக சப்போர்ட் மாற்று மதத்தினர் உங்களுக்கு அளிப்பர்கள் வெற்றியும் கிட்டும். தாழ்ந்த நிலையில் உள்ள மக்களின் ஜன சேர்க்கை தான் உங்களை முன்னிலை படுத்தும் .

  • கடைசி 6 மாதங்கள் அரசு ஆதரவு உங்களுக்கு கிட்டும். புனித யாத்திரைகள் பயணிப்பீர்கள் சகாயம் அனுகூல தெய்வ வழிபாடு உங்களை காக்கும் அஷ்டமத்து சனியால் ஏற்படும் .

  • குடைச்சல் குறைய திருநள்ளாரு சென்று சனீஸ்வரணை தரிசிப்பதோடு அங்குள்ள மரகத லிங்கத்தையும் வழிபாட்டு வரவும். தினமும் ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம்.
images/content-image/1698762284.jpg

 சிம்மராசி: 

 அற்புதமான பலன்களை அடிக்கி கிட்டே போகணும் தான் தோணுது.அடியேனுக்கு ரொம்ப வேண்டியவங்க எல்லாம் இந்த ராசி தான். 

அதுக்காக வேண்டியவங்களுக்கு ஒரு பலன் வேண்டாதவங்களுக்கு ஒரு பலன் என்று சொல்ல முடியுமா? அது சாஸ்திர குற்றம் அல்லவா? சஹாதேவனை போல பலன் உரைக்க வேண்டா மா? அது தானே தர்மம். பிரதான கிரகங்கள் நன்மை அளிக்க தயாராக இல்லை. 

  • கேது பகவான் 3ம் இடத்தில் இருந்த போது, இருந்த அசட்டு துணிச்சல் இப்ப காட்ட முடியாது. வார்த்தையை அளந்து பேசணும் மறை முக எதிரிகள் உங்களுக்கு ஜாஸ்தி. 

  • ஏன்னா உண்மையா இருக்கிறவங்கள். ஒதுங்கி போய்டுவாங்க., ஜால்ரா, தலை ஆட்டி, பேர்வழிகள் தான் உங்களுக்கே பிடிக்கும். தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தை உபதேசம். அப்போ உண்மையானவங்க உங்களை எப்படி நெருங்க முடியும்?

 ஆனா அடியேன் உண்மையை சொல்லித்தான் ஆகணும். கடைபிடிக்க வேண்டியவைகள்:

  1.   அதிகம் பேசாதீர்கள் யாரிடமும் வாக்கு உறுதி அளிக்காதீர்கள் 

  2.  தேவை கருதி வெளியூர் பிராயணங்கள் திட்டமிட்டு செயலாற்றுங்கள்.

  3.  சிறிய நீண்ட பிராயணங்களின் போது உரிய ஆவண ங்களுடன் செல்லுங்கள்.

  4.  உயர் பதவிகளில் உள்ளவர்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஜாக்கிரதையாக விழிப்போடு பணியாறறுங்கள். 

  5.  பணி மாற்றம், இருப்பிட மாற்றம், தற்போது வேண்டாம்.
     
  6.  வீடு மற்றும் புதிய வாகன முதலீடுகள் தற்போது வேண்டாம்.

  7. நீண்ட கால நட்பை இழந்து விடாதீர்கள். புதிய நட்பை சோதித்து நண்பரா க்கிக்கொள்ளுங்கள்.

  8. உடல் நலன் பாதுகாப்பு ரொம்ப முக்கியமானது.

  9. குழந்தைகள் நலன் கருதி எடுக்கும் முடிவு தன்னிச்சயாக இல்லாமல் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். 

  10. தெய்வ வழிபாட்டை அதிகரியிங்கள். குரு ராகு, கேது சனீஸ்வர பரிகாரங்கள் செய்து கொண்டே இருக்கவும். நிச்சயம் உங்க வீட்லேயும் ஒரு சிம்மராசி இருக்கலாம்.
  •  அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம். 
  • ஜோதிடம் முறைப்படி கற்போம். கற்பிப்போம்.
  •  அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் கொண்டு தீர்வு காண்போம்.
மேலும் சோதிட தேவைக்கு அழையுங்கள்.

 Dr.Navasakthi Sundarjee 

 0091 99941 81293

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4