பிறந்த கார்த்திகை மாத அனைத்து ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
பிறந்த கார்த்திகை மாத அனைத்து ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி தீரும். முயற்சி ஒன்றில் புதிய இடம் வாங்குவீர்கள். பரணி : இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1 : வெளியூர் பயணம் ஆதாயமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் இன்று வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ரோகிணி : உங்கள் அணுகுமுறைகளை மற்றவர் பாராட்டுவர். உடல்நிலை சீராகும். திட்டமிட்ட முயற்சி நிறைவேறும். மிருகசீரிடம் 1,2 : ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : செலவு அதிகரிக்கும். ஒரு செயல் முடிவிற்கு வர முடியாமல் போகும். முயற்சிகளை தள்ளி வைப்பீர். திருவாதிரை : வேலை பளுவால் மனம் சோர்வடையும். நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும். புனர்பூசம் 1,2,3 : திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செயல் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் : வெளியூர் பயணத்தினால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதாரம் உயரும். ஆயில்யம் : புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் காண்பீர். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

மகம் : பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பூரம் : உங்கள் முயற்சி பலன் தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர். உத்திரம் 1 : நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். அஸ்தம் : தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிக்கும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். சித்திரை 1,2 : உங்கள் சாமர்த்தியத்தால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம்

சித்திரை 3,4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். சுவாதி : குழப்பம் விலகும். யோசித்து செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். விசாகம் 1,2,3 : விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அனுஷம் : வெளியூர் பயணம் லாபமாகும். நண்பர்களால் பிரச்னைக்கு ஒன்றுக்கு தீர்வு கண்பீர். வருமானம் அதிகரிக்கும். கேட்டை : வாழ்க்கைத் துணையின் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

மூலம் : உடலில் இருந்த சங்கடம் நீங்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். பூராடம் : முயற்சியில் ஒன்றில் வெற்றி காண்பீர். வருவாய் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு உண்டாகும். உத்திராடம் 1 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்று எதிர்ப்பார்த்த தகவல் வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : எதிர்ப்பு அகலும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். திருவோணம் : உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்ட செயல் நிறைவேறும்.சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2 : எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வரவு திருப்தியாகும். சதயம் : குடும்பத்தில் நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1,2,3 : குடும்பத்தில் இருந்த பிரச்னையை பேசித் தீர்ப்பீர். வரவேண்டிய பணம் வரும். கடன் அடையும். 

மீனம்

பூரட்டாதி 4 : துணிவுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்திரட்டாதி : பணி புரியும் இடத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். ரேவதி : நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.