கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபர் யாழில் கைது!

#SriLanka #Jaffna #Arrest #Police #Robbery
PriyaRam
2 years ago
கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் விரத வழிபாட்டுக்கு கோவிலுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டவரே கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2023/10/1698820455.jpg

யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

images/content-image/2023/10/1698820475.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4