தினேஸ் ஷாப்டர் படுகொலை செய்யப்படார் - நீதிமன்று தீர்ப்பு!

#SriLanka #Colombo #Murder #Court Order
PriyaRam
2 years ago
தினேஸ் ஷாப்டர் படுகொலை செய்யப்படார் - நீதிமன்று தீர்ப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.

images/content-image/2023/10/1698829083.jpg

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் இதனை அறிவித்தார்.

கழுத்து மற்றும் முகத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவரது மரணம் பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4