பேருந்து கட்டண அதிகரிப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

#SriLanka #Bus #Fuel
PriyaRam
2 years ago
பேருந்து கட்டண அதிகரிப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித், 

மீண்டும் டீசல் விலை அதிகரிக்கப்படுமாயின் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698837458.jpg

பேருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பயணக் கட்டணத்தை குறைக்க முடியாத நிலைமை காணப்படுவதாக முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4