அஸ்கிரிய மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த இந்திய மத்திய நிதி அமைச்சர்!

#India #SriLanka #kandy #Minister
PriyaRam
2 years ago
அஸ்கிரிய மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த இந்திய மத்திய நிதி அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இன்று கண்டிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை இன்று சந்தித்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

images/content-image/2023/10/1698839872.jpg

வணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அங்கீகரித்ததோடு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4