உடவலவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உடவலவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வருகின்றது.  

இதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் வடிந்தோட ஆரம்பிக்கும் என மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரணவிடம் தெரிவித்தார்.  

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

இதன்படி, உடவலவ நீர்த்தேக்கத்திற்கு கீழே வளவ ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நில மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4