மீன ராசியினருக்கு பணியில் முழுமையான கவனம் தேவை - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
மீன ராசியினருக்கு பணியில் முழுமையான கவனம் தேவை - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பரணி : வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். குழப்பம் நீங்கும். கார்த்திகை 1 : உழைப்பு அதிகரிக்கும். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி : அலுவலகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2 : நிதி நிலை சீராகும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : மனதில் தேவையற்ற குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானித்து செயல்படுவீர்கள். திருவாதிரை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் இன்று சங்கடப்படுவீர்கள். புனர்பூசம் 1,2,3 : உங்கள் கவனச் சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறையான பலன்கள் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைக்காக கடன் வாங்குவீர். எதிர்பாராத செலவு ஏற்படும். பூசம் : புதிய முயற்சி இன்று இழுபறியாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் ஒதுங்கிப் போவார்கள். ஆயில்யம் : அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். சேமிப்பு பணம் கை கொடுக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்

மகம் : உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வர வேண்டிய பணம் வரும். பூரம் : வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தொழிலில் உண்டான தடை விலகும். எதிர்ப்பு நீங்கும். அஸ்தம் : உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். அதிகாரியின் ஆதரவு உண்டு. எதிர்பார்ப்பு நிறைவேறும். சித்திரை 1,2 : ஊழியர்கள் உதவியால் உங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். 

துலாம்

சித்திரை 3,4 : பணியிடத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். சுவாதி : மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். பணிக்குரிய தகவல் வரும். விசாகம் 1,2,3 : உங்கள் முயற்சிகளை நிறைவேற்றுவீர். நண்பர்கள் உதவி நன்மையில் முடியும். வரவு அதிகரிக்கும். 

விருச்சிகம்

விசாகம் 4 : செயல்களில் தடைகளை சந்தித்தாலும் கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். அனுஷம் : அலைச்சல் அதிகரிக்கும். பிரச்னை இன்று உங்களைத்தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். கேட்டை : வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும். 

தனுசு

மூலம் : உங்கள் கனவு நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். உத்திராடம் 1 : நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர். கூட்டுத்தொழில் லாபம் தரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : இறை அருளால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். திருவோணம் : கேள்விக்குறியாகவே இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சதயம் : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பீர். சொத்து விஷயத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். நினைத்ததை நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4 : பணி புரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பணியில் முழுமையான கவனம் தேவை. உத்திரட்டாதி : உடன் பணி புரிபவர்களால் சில சங்கடம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். ரேவதி : வெளியூர் பயணத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.